ETV Bharat / state

ஆயுளை பெருக்கும் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்! - நடிகர் எஸ்கே

ஆயுளை பெருக்கித் தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்
author img

By

Published : Dec 13, 2022, 4:01 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பக்தர் மார்க்கண்டேயனுக்காக, காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளிய சிவபெருமான்,எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த புராண நிகழ்வை உள்ளடக்கிய திருத்தலமாக விளங்குகிறது.

இந்நிலையில் திருக்கடையூர் கோயிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். கோயில் கொடி மரத்தின் அருகே சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, குழந்தைகள் ஆராதனா மற்றும் குகன்தாஸ் ஆகியோர் கோ மற்றும் கஜ பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்
திருக்கடையூர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்

தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற சிவகார்த்திகேயன் ஸ்ரீ கள்ளவாரண விநாயகர், சுவாமி அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி சந்நிதிகளில் சிறப்புப் பூஜைகள் செய்து தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் குடும்பத்தாருக்கு, சுவாமி அபிராமி அம்பாள் படம் பொறிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை ஏன்?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.