நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் கால் பதிப்பார் என அவரது ரசிகர்கள் கடந்த 30 ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கைகள், செயல்பாடுகள் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்ற எண்ணத்தை ரஜினி ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.
இதனையடுத்து, கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்தும், அவரது அரசியல் வருகை குறித்தும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. அதற்கு நேற்று (அக். 29) தனது அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இன்று (அக். 30) காலை மயிலாடுதுறை நகர்புறங்களில் பேருந்து நிலையம், ரயிலடி, மணிக்கூண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் "அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்... விவசாயிகளின் துயர் துடைக்க வா தலைவா வா..." - உண்மை விவசாய பெருங்குடி மக்கள் மயிலாடுதுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...தேவர் சிலைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை!