உலகம் முழுவதும் நேற்று (மே 1) உழைப்பாளர்கள் தினம் கொண்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பலரும் தொழிலாளர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில், துபாய் நாட்டில் இருக்கும் நாகூரைச் சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் ஷேக் தாவூத் மரைக்காயர் என்பவர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்து அசத்தினார்.
நாகூரில் இருக்கும் தனது நண்பர்களின் உதவியோடு தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்தார்.
தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் நாகை நகராட்சி ஆணையர் யேசுராஜ் பிரியாணியை பரிமாற அனைவரும் மகிழ்ச்சியுடன் அனைவரும் ருசித்து சாப்பிட்டனர். முன்னதாக தொடர்ந்து களப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு யோகா பயிற்சியும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேற்கு தொடர்ச்சி மலையில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!