தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. அதில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அறுபத்துமூவர்பேட்டை பகுதியைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி சம்பூர்ணம் தனது ஜனநாயகக் கடமையாற்ற வாக்குச்சாவடி மையத்திற்கு உறவினரின் துணையுடன் ஆட்டோவில் வந்தார்.
தள்ளாத வயதிலும் கைத்தடி ஊன்றி தனது வாக்கினைப் பதிவு செய்தார். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடையே ஆச்சரியத்தையும், வாக்களிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.