நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அரசூர், நல்ல விநாயகபுரம், விளந்திடசமுத்திரம் ஆகிய மூன்று கிராமத்திலிருந்து சுமார் 40 பேர் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட மலைபுரம் மாவட்டம் குட்டிபுரத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விவசாய கூலி வேலைக்கு சென்று உள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்து தமிழக எல்லை கேரளா எல்லை மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு வேலைக்கு சென்ற சீர்காழி தாலுக்காவை சேர்ந்த 50 விவசாய கூலி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாள்களாக உணவு சாப்பிடவில்லை, வெளியே சென்றால் காவலர்கள் அடிக்கின்றனர் அதனால் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை என வாட்ஸ் அப்பில் பேசி தங்களை விரைவில் காப்பாற்றுமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.