நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 38 பேர் உறவினர்களின் வீட்டிற்கும், திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் கடந்த மார்ச் 13ஆம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, நீடூர் ஆகிய பகுதிகளுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு உத்தரவால் சிங்கப்பூரிலிருந்து வந்த 38 பேரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி கரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 21 நாள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 38 பேரையும் தனி பேருந்தில் ஏற்றி சென்னை விமான நிலையத்திற்கு மயிலாடுதுறை போலீசார் அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இருந்து இன்று காலை பேருந்து புறப்பட்டுச் சென்றது.