மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தின் இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த சுவாமிகள் விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர். ‘முப்பெரும் தேவியர்களை வழிபாடு செய்து பத்தாம் நாளான விஜயதசமி அன்று புது கணக்கை தொடங்கவும் பள்ளிப்படிப்பைத் தொடங்கவும் உகந்த நாளாக விளங்குகிறது’ எனக் கூறினார்.
படிப்படியாக வளர வேண்டும் என்பதற்காக வீடுகளில் படிகள் அமைத்து அதில் கொலு அமைத்துள்ளனர். மகாபாரதத்தில் அர்ஜுனன் வன்னி மரத்திற்கு அடியில் ஆயுதங்களை பூஜை செய்த தினமே ஆயுத பூஜையாக கடைபிடிக்கப்படுகிறது. கலைகள் தொழில்கள் வளர்ந்து நாடு நாட்டு மக்கள் சுபிட்சம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திறேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:வெகு விமரிசையாக நடைபெற்ற அண்ணாமலையார் கோயிலின் 8ஆம் நாள் நவராத்திரி விழா