நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல் நிலைய எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி கார், இருசக்கர வாகனங்களில் வெளியூர்களுக்குச் செல்லக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது.
சாலைகளில் அவசியமின்றி சுற்றித் திரிய வேண்டாம் என்றும், முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களைக் கட்டாயம் பயன்படுத்தவும் காவல் துறையினர் அறிவுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 262 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பித்த இருநாள்களில் 208 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
தவிர, மோட்டார் வாகனச்சட்டத்தை மீறியதாக மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்து ஆறு வழக்குகள் (1006) பதிவுசெய்யப்பட்டுள்ளன. வழக்குப்பதிவு செய்வது மட்டும் அல்லாமல், தோப்புக்கரணம் போன்ற நூதன தண்டனைகளையும் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கிய 'மனிதநேய' காவலர்