ETV Bharat / state

கரை திரும்பிய நாகை மீனவர்கள் 20 பேர்!

நாகப்பட்டினம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 20 பேர் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் கரை திரும்பினர்.

நாகப்பட்டினம் மீனவர்கள்  கரை திரும்பிய நாகை மீனவர்கள் 20 பேர்  சிறைபிடிக்கபட்ட நாகை மீனவர்கள்  20 Nagapattinam fishermen return to shore  Nagapattinam fishermen  20 Nagapattinam fishermen Release
20 Nagapattinam fishermen return to shore
author img

By

Published : Mar 27, 2021, 9:37 AM IST

Updated : Mar 27, 2021, 10:30 AM IST

சர்வதேச கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் மார்ச் 24ஆம் தேதி திருகோணமலையில் சிறைப்பிடித்தனர்.

பின்னர் இரண்டு விசைப்படகுகளில் இருந்த மீனவர்களை யாழ்ப்பாணம் கடற்படை முகாமிற்கு கொண்டுசென்ற இலங்கை கடற்படையினர், அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதனிடையே, சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்தனர். இதையடுத்து, இலங்கை தூதரக அலுவலர்களிடம் இந்திய தூதரக அலுவலர்கள் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு மீனவர்கள் 20 பேரையும் அவர்களது இரு விசைப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 20 பேர் இரண்டு விசைப்படகுகளுடன் நேற்று (மார்ச் 26) நாகை துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

கரை திரும்பிய நாகை மீனவர்கள்

துறைமுகம் வந்துசேர்ந்த மீனவர்களைக் கண்ட அவர்களது உறவினர்கள் அவர்களை கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "இரண்டு விசைப்படகுகளிலிருந்த நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துகொண்டனர்.

நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மூன்று கப்பல்களில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் எங்களது கைகளைப் பின்புறமாகக் கட்டி நீண்ட நேரம் படகில் நிற்கவைத்து அடித்தனர்” என வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இரண்டு விஜயபாஸ்கரையும் டெபாசிட் இழக்க செய்யுங்கள்: கரூரில் ஸ்டாலின் பேச்சு!

Last Updated : Mar 27, 2021, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.