மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், மழைநீர் வடிகால் தூர்ந்துபோனதால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மழைநீர் வடிய வழியின்றி பாதாள சாக்கடையில் உள்புகுந்து செல்வதால் திடீரென மயிலாடுதுறை - தரங்கம்பாடி செல்லும் நாஞ்சில் நாடு சாலையில் 15 அடி அகலம் 20 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு சரிசெய்யும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் வீட்டிற்கு முன்பு பள்ளம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.