ETV Bharat / state

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.16 லட்சத்திற்கான இழப்பீடு ஆணையை வழங்கிய நீதிபதி! - நாகை மாவட்ட செய்திகள்

நாகை: விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 16 லட்ச ரூபாய் இழப்பீட்டுக்கான ஆணையை சமரச மைய நீதிபதி வழங்கினார்.

_lakh_compensation
_lakh_compensation
author img

By

Published : Oct 24, 2020, 7:35 AM IST

நாகை மாவட்டம் திருமருகலைச் சேர்ந்தவர் தமிழ்வாணன், எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்தார். 2017ஆம் ஆண்டு செப்.6ஆம் தேதி ஆக்கூர் முக்கூட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் வந்த கார் மோதி படுகாயமடைந்தார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் நடக்க முடியாத நிலைக்கு உள்ளானார்.

இதனையடுத்து இழப்பீடு கேட்டு நாகை சார்பு நீதிமன்றத்தில் தமிழ்வாணன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் விசாரித்தார். இவ்வழக்கு சமரச மையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. இதில் ஐசிஐசிஐ காப்பீடு நிறுவனம், தமிழ்வாணனுக்கு 16 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட தமிழ்வாணனை அவரது குடும்பத்தினர் சமரச மையத்திற்கு காரில் அழைத்து வந்தனர். நீதிபதி ரகுமான், காரில் அழைத்து வரப்பட்ட தமிழ்வாணனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றப்பின் 16 லட்சம் ரூபாய் இழப்பீட்டிற்கான ஆணையை வழங்கினார்.

இதையும் படிங்க:

மதுரையில் இன்று புதிதாக 71 கரோனா பாதிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.