மதுரை: குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர். இது குறித்து மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "திக, திமுக ஆதரவாளர்கள் கேலி செய்யும்விதமாகப் பதிவிடுகின்றனர். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை" எனப் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை காவல் துறையினர் கைதுசெய்யப்போவதாகக் கிடைத்த தகவலை அடுத்து மாரிதாஸ் வீட்டில் பாஜக நிர்வாகிகள் குவிந்தனர். கைது செய்யவந்த காவல் துறையினரிடம் அவர்கள் முறையிட்டனர்.
மேலும் அவரது கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி: 3 ராணுவ வாகனங்கள் வருகை