ETV Bharat / state

நெசவாளர்களுக்கு வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பு - அமைச்சர் ஆர்.காந்தி

தமிழக அரசு நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெளியிட்ட அறிக்கை, அமைச்சர் ஆர்.காந்தி
வெளியிட்ட அறிக்கை, அமைச்சர் ஆர்.காந்தி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை: தமிழக அரசு நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாகவும், நெசவு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் அதிமுக சட்டபேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த நவம்பர் 11ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், அந்த அறிக்கையில் உள்ள தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மறுப்பறிக்கை ஒன்றை இன்று (நவம்பர்.24) வெளியிட்டுள்ளார்.

நெசவாளர்களுக்கான தொழில் வரி: அந்த அறிக்கையில், “சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் கடித ந.க.எண்.26821/ஆர்-1/2024 நாள் 06.11.2024ன்படி மின்சார வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு பட்டியலுடன் ஒப்பீடு செய்யப்பட்டு வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என கண்டறிய ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் (சென்னை தவிர) மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் ஊராட்சி ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், இதுவரை சதுர அடிக்கான தொழில்வரி ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, குடிசைத் தொழில் போல வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக வெளியான தகவல் தவறானது”.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையில் தேர்வு வைப்பதா! என்ன கொடுமை அரசே இது? - சு.வெ. காட்டம்

நூல் விலை உயர்வு: “பருத்தி நூல், பட்டு நூல், கம்பளி மற்றும் கலப்பின நூல் ஆகிய நூல் கொள்முதலுக்கு 15% விலை மானியத்துடன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென 2023-2024ஆம் ஆண்டில் ரூ.54.42 கோடி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் நூல் விலை நிர்ணயக் குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, நூல்விலை கட்டுப்பாட்டில் வைக்கப்படுள்ளது”.

சீருடை வழங்கும் திட்டம்: “ பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா சீருடை மற்றும் விலையில்லா வேட்டி சேலை திட்டங்கள் எவ்வித தொய்வுமின்றி தமிழக நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டுமே நடந்து வருகிரது. அதன்படி 2024-2025 திட்டத்தின் கீழ் 10883 எண்ணிக்கையிலான தறிகள் ஈடுபடுத்தப்பட்டு, 524.35 லட்சம் மீட்டர் அளவிலான சீருடைத் துணிகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது”.

வேட்டி சேலை வழங்கும் திட்டம்: மேலும், விலையில்லா வேட்டி சேலை திட்டத்தில் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு 177.64 லட்சம் எண்ணிக்கையிலான சேலைகள் மற்றும் 177.22 லட்சம் எண்ணிக்கையிலான வேட்டிகள், 2391 எண்ணிக்கையிலான கைத்தறிகள், 12040 எண்ணிக்கையிலான பெடல்தறிகள் மற்றும் 54193 எண்ணிக்கையிலான விசைத்தறிகளின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு பொங்கல் நாளன்று மக்களுக்கு வழங்கப்பட உள்ளது”.

வெளிமாநில தரமற்ற போலி ஜவுளிகளா? கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம், 1985ன்படி கைத்தறித் துறையின் அமலாக்கப் பிரிவு மூலமாக திருச்செங்கோடு, சேலம் மற்றும் ஈரோடு சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2023-2024 ஆம் ஆண்டில், 47710 விசைத்தறிகள் ஆய்வு செய்யப்பட்டு 76 வழக்குகளும் மற்றும் நடப்பு ஆண்டில் அக்டோபர் 2024 வரை 26 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாதந்தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவததால் போலியாக வெளிமாநிலங்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி இரகங்கள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.வெளி மாநிலங்களிலிருந்து போலியாக தரமற்ற சேலைகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் தகவல் பொய்யானதாகும்.

இலவச மின்சாரம்: கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையே 200 அலகுகள் மற்றும் 750 அலகுகள் மின்சாரம் என்பதை 2023ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி முதல் ஒரு முறையே 300 அலகுகளாகவும், 1000 அலகுகளாகவும் உயர்த்தி தற்போதைய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 75364 கைத்தறி நெசவாளர்களும், 1,62,799 விசைத்தறி நெசவாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.

வீடுகட்டும் திட்டம்: கடந்த அதிமுக ஆட்சியல் நெசவாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.2.60 லட்சம் மட்டுமே ஒரு நெசவாளருக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: "எடப்பாடிக்கு உள்ள தகுதி எனக்கு கிடையாது" - உதயநிதி ஸ்டாலின் சூசகம்!

தற்போது, வரையில் நகர்ப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 1950 கைத்தறி நெசவாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, 810 கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டுமான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 643 பயனாளிகளுக்கு 17.04 கோடி மானியத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது, 288 பயனாளிகள் வீடுகளை கட்டி முடித்துள்ளனர். மீதம் உள்ள 1140 பயனாளிகளின் தகுதியின் அடிப்படையில் விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

மேலும், கிராமப்புறத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் AWASS PLUS பட்டியலில் இடம் பெற்ற தகுதியான 22 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்ய முடியாதவர்கள் “கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டத்தின் கீழ் பதிவு செய்து, இதுவரை 2392 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி மானியம்: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை 139 நாட்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடு சேர்த்து 30 விழுக்காடு தள்ளுபடி மானியம் வழங்கவும் ஆணையிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படாமல் விட்டுச் சென்ற நிலுவைத் தொகை ரூ.160 கோடியினை, 2021ஆம் ஆண்டில் முழுவதுமாக விடுவித்துள்ளது.

இதையும் படிங்க:சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழா: பாமக இராமதாசுக்கு அழைப்பு - அமைச்சர் பொன்முடி!

மேலும், 2024 அக்டோபர் மாதம் வரை ரூ.794.25 கோடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸுக்கு விடுவித்துள்ளது. கோ-ஆப்டெக்ஸ் உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.90 கோடி அளவிற்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கோ-ஆப்டெக்ஸ் ஆர்டரே தருவதில்லை என்பது பொய்யான தகவல்.

கூலி உயர்வு: கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி நெசவு தொழில் ஈடுபடும் கைத்தறி நெசவாளர்களுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்து நோக்கில் அவ்வப்போது அடிப்படைக்கூலி மற்றும் அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படுகிறது. வழங்கப்பட்ட அடிப்படை/ அகவிலைப்படி கூலி உயர்வு சதவிகிதம் பின்வருமாயின்,

  • 01.01.2022 அடிப்படைக் கூலியில் (Basic Wages) 10% உயர்வு மற்றும் அகவிலைப்பயில் (DA) 10% உயர்வு
  • 01.05.2023 அடிப்படைக் கூலியில் (Basic Wages) 10% உயர்வு
  • 01.08.2024 அகவிலைப்படியில் (DA) 10% உயர்வு.

கைத்தறித் துறை சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளின் நிறைவேற்றம்: 2021இல் கைத்தறித் துறைக்காக அளிக்கப்பட்ட அறிக்கைபடி மொத்தம் 13 வாக்குறுதிகளில் 12 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  1. தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மாவட்ட/ மத்திய கூட்டுறவு வங்கிகளில் பெறும் நடைமுறை மூலதன கடன் தொகைக்கான வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியம் (Interest Subsidy) சங்கங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக அரசு ரூ.14.73 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  2. கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் இது வரை கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.29.04 கோடி மதிப்பில் 30,227 தறிகள் மற்றும் தறி உபகரணங்களும், (Looms and Accessories) மற்றும் 434 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.30 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
  3. 10 சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom parks) அமைக்க அரசால் திட்டமிடப்பட்டு, தற்போது காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 இரண்டு இடங்களில் கைத்தறி பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  4. ஆரணி பகுதியில் 5000 பட்டு நெசவாளர் பயன் பெறும் வகையில் 20.53 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.44 கோடி செலவில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா (Handloom Silk Park) நிறுவப்படவுள்ளது.
  5. நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் (Weavers Mudra Scheme) கடந்த 3 ஆண்டுகளில், 37455 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.191.67 கோடி, வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக செயல்படுத்தி வருகிறது.
  6. கைத்தறி நெசவாளர்களுக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.1000/- லிருந்து ரூ.1200/- ஆக 01.08.2023 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
  7. நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்கள் சேமிப்புத் தொகை முழுவதையும் பெறுவதற்கான கால அளவினை 25 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக 05.07.2023 முதல் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை சிலர் அறிக்கையாக வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் போக்கை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று குறிப்பிடிருந்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.