ETV Bharat / state

மதுரை அருகே இளைஞர் படுகொலை: போலீசார் விசாரணை - sourashtra colony murder

மதுரை வலையங்குளம் அருகே உள்ள சௌராஷ்டிரா காலனி பகுதியில் இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று படுகொலை செய்யப்பட்டார்.

youth-murdered-in-madurai-sourashtra-colony
மதுரை அருகே இளைஞர் படுகொலை: போலீசார் விசாரணை
author img

By

Published : Jul 10, 2021, 1:18 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உள்பட்ட வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து முனியாண்டி (38).

இவர், அப்பகுதியில் உள்ள சௌராஷ்டிரா காலனியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெருங்குடி காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட முத்து முனியாண்டியின் தந்தை மொக்கையனை கடந்த ஆண்டு சொத்து தகராறு காரணமாக முத்து முனியாண்டியே கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெருங்குடி காவலர்கள் இக்கொலை பழிக்குப்பழி சம்பவமா அல்லது வேறு நோக்கங்களின் அடிப்படையில் நடைபெற்றதா ஏன பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ரயில்வே ஊழியர்களை உற்சாகப்படுத்தும் செல்ஃபி தளம்: மதுரை ரயில்வே கோட்டம் ஏற்பாடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.