மதுரை திருப்பாலை அருகே உள்ள உச்சப்பரம்புமேடு மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் (40). இவரது மனைவி நாகம்மாள். பூமிநாதன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கண்ணனேந்தல் மீனாட்சி நகர் அருகே எதிரே வந்த இனோவா கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த பூமிநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூமிநாதன் உயிரிழந்தார்.
இது தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த சர்வேயர் காலனியைச் சேர்ந்த ராஜசிங்கம் (28) என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் ராஜசிங்கம் குடிபோதையில் கார் ஓட்டிவந்து, விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பால்கனி இடிந்து விழுந்து விபத்து; 3 சிறுவர்கள் காயம்