ETV Bharat / state

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மீண்டும் தொடங்கக்கோரிய வழக்கு

author img

By

Published : May 12, 2021, 9:53 PM IST

மதுரை: திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மீண்டும் தொடங்கக்கோரிய வழக்கில் மத்திய,மாநில அரசுகளின் பதில் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Corona vaccine production at HLL Biotech

மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "திருச்சியில் 1963ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது மிகப்பெரிய அளவில் பொறியியல் சம்பந்தமான வேலைகள் நடைபெற்று வருகிறது. இங்கு 50 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர்.

'1 மணி நேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் திறன்'

பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய மூன்று பிளான்ட் செயல்பட்டு வந்தது. இவை ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கக்கூடிய திறன் கொண்டது. ஆனால் 2003ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு அப்பகுதி செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனம் 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தடுப்பூசி தயாரிப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகள் இருந்தும் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

கரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்துவருகிறது. இதனை கட்டுப்படுத்த திருச்சியில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்து ஆக்சிஜன் தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'கரோனா தடுப்பூசியை ஹெச்.எல்.எல் நிறுவனத்தில் தயாரிக்கலாம்'

அதேபோல் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள் புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசிகள் பல மாநிலங்களுக்கு தாமதமாக கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செங்கல்பட்டில் இயங்கிவரும் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி எளிதாக சென்றடையும் என அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்யவும் தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்த திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவும், அதேபோல் செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த மனு சென்னை தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் சார்பாக பதில் அளிப்பதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.