ETV Bharat / state

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடியும்? - மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி - madurai periyar bus stand

மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் எப்போது முடிவடையும் என்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai
madurai
author img

By

Published : Feb 10, 2020, 11:56 PM IST

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுவருவதால், அங்கு காலி செய்யப்பட்ட பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களில் சிலர் தற்காலிகமாக எல்லீஸ் நகர் பேருந்துநிலையம் முன்பு கடைகளை அமைத்துள்ளனர். அதனால் ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை எல்லீஸ் நகர் பேருந்து நிலையம் முன்பு நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளால் இடையூறு ஏற்படுவதால் அவற்றை அகற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு கடந்தாண்டு பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, எல்லீஸ் நகர் பேருந்து நிலையம் முன்பு கடைகளை அமைப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அந்தத் தடையை நீக்கக்கோரி மதுரை பெரியார் பேருந்து நிலைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தலைவர் ஆர்.வி. ராஜாராம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்றிடத்தில்தான் கடை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முறையாக வாடகை செலுத்திவருகிறோம். மேலும் இக்கடைகளால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிவடைய எவ்வளவு நாளாகும்? என மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மாநகராட்சி சார்பில் கட்டுமானப் பணிகள் 50 விழுக்காடு மட்டுமே முடிவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் எப்போது முடிவடையும் என்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : விளை நிலங்களை வீட்டு மனையாக மாற்றிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

Intro:ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடியும்? - உயர்நீதிமன்றம் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு கேள்வி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை, பெரியார் பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் எப்போது முடிவடையும் என்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடியும்? - உயர்நீதிமன்றம் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு கேள்வி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை, பெரியார் பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் எப்போது முடிவடையும் என்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை எல்லீஸ்நகர் பஸ் நிலையம் முன்பு நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றக்கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது எல்லீஸ்நகர் பஸ் ஸ்டாண்ட் முன்னுள்ள நடைபாதையில் கடைகள் அமைக்க இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தடையை நீக்கக்கோரி
மதுரை பெரியார் பஸ் நிலைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தலைவர் ஆர்.வி.ராஜாராம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தில் தான் கடை வைத்துள்ளோம். இதற்கு முறையாக வாடகை செலுத்தி வருகிறோம்.
இந்த கடைகளால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படவில்லை. எனவே எல்லீஸ்நகரில் தற்காலிக கடை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிவடைய எவ்வளவு நாளாகும்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு மாநகராட்சி சார்பில் கட்டுமானப்பணிகள் 50 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் எப்போது முடிவடையும் என்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரிம் 17-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.