ETV Bharat / state

மதுரை-மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில் - etv news

மதுரை-மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில் மதுரை - மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

மதுரை-மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில்

author img

By

Published : Mar 13, 2021, 10:38 PM IST

மதுரையிலிருந்து மும்பை செல்லும் வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’ வண்டி எண் 01201 மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் மார்ச் 17 முதல் மறு அறிவிப்பு வரும்வரை புதன்கிழமைகளில் லோக்மான்ய திலக் டெர்மினஸ்சிலிருந்து மதியம் 01.15 மணிக்கு புறப்படும்.

இதையடுத்து, மறுநாள் மாலை 06.10 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 01202 மதுரை - மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் வாராந்திர சிறப்பு ரயில் மார்ச் 19 முதல் மறு அறிவிப்பு வரும்வரை வெள்ளிக்கிழமைகளில் மதுரையிலிருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 20.30 மணிக்கு மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் சென்றடையும்.

இந்த ரயில்கள் ரேணிகுண்டா ராஜம்பேட்டை, கடப்பா, கூட்டி குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் ரோடு, ரெய்ச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியமாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடித்து 8 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.