மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், வருகின்ற 18ஆம் தேதி 'தமிழ்நாட்டை மீட்போம்' என்ற அரசியல் மாநாடு நடக்கவுள்ளது. மத்திய அரசின் இசைவு அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மாநாட்டை முன்னெடுக்கிறோம்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 18 பேர் உயிரிழந்து வருத்தமளிக்கிறது. பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் குறித்து கண்காணித்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி போதுமானது அல்ல. உயிரிழந்தவர்களுக்கு தலா 1கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். அரசின் நிதியை பயன்படுத்தி பல கோடி ரூபாயை விளம்பரத்திற்கு பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகாரளித்த நிலையில் பதில் வரவில்லை.
திமுகவுடனான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நலகூட்டணி போன்று கூட்டணியை நாங்கள் ஏற்படுத்த விரும்பவில்லை. பாஜகவும், அதனுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் கொள்கை. யாருடைய குடும்பத்தினர் வேண்டுமானாலும் விருப்பப்பட்டால் அரசியலுக்கு வரலாம்.
நாங்கள் தான் ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். நாங்கள் 3ஆவது அணி அல்ல ஒரே அணிதான். திமுக அணி. யார் வந்தாலும் இணைக்கிறோம்; கூடுதல் இடங்கள் கேட்ககூடாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை தி.நகரில் கட்டப்படவுள்ள பத்மாவதி தாயார் ஆலையம்!