ETV Bharat / state

அழிவை நோக்கி செல்லும் வைகையை காப்பாற்ற வேண்டியது அவசியம் - தண்ணீர் மனிதர் - மதுரை மாவட்ட செய்திகள்

பல்வேறு சூழல் காரணமாக மதுரையின் அடையாளமாக திகழும் வைகை தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனைக் காப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

அழிவை நோக்கிச் செல்லும் வைகையைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்

author img

By

Published : Sep 26, 2021, 7:10 AM IST

மதுரை: ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் தண்ணீர் புரட்சியை மேற்கொண்டவர் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு ரமோன் மகசேசே, 2005ஆம் ஆண்டு ஜம்னா லால் பஜாஜ் ஆகிய உயரிய விருதுகளைப் பெற்றதுடன், 2015ஆம் ஆண்டு சுவீடன் அரசின் நீருக்கான நோபல் பரிசையும் வென்றார்.

தன்னுடைய தருண் பாரத் சங்கம் என்ற அமைப்பின் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நீர் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டவர். ஜெயப்பிரகாஷ் நாராயணன், வினோபா பாவேயுடன் இணைந்து பணியாற்றியவர்.

காந்தியக் கொள்கைகளின் மீது ஆழ்ந்து பிடிப்பும் பற்றும் கொண்டவர். காந்தி அரையாடை ஏற்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக அண்மையில் மதுரைக்கு வருகை தந்த ராஜேந்திர சிங், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

அழிவை நோக்கிச் செல்லும் வைகையைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்

எங்களுக்கு தண்ணீர் அவசியம்

அப்போது பேசிய அவர், " இந்தியாவின் மிகக் குறைந்த மழையளவு கொண்ட மாநிலம் ராஜஸ்தான். ஆண்டிற்கு 200 அல்லது 400 மி.மீ மழைப்பொழிவே எதார்த்த நிலை. இதன் காரணமாக ராஜஸ்தானிலுள்ள பெரும்பகுதி கிராம மக்கள் வேறு வேறு இடங்களுக்குப் புலம்பெயரத் தொடங்கினர். நான் ஒரு ஆயுர்வேத மருத்துவராகத்தான் அங்குள்ள கிராமங்களுக்கு வைத்தியம் பார்க்கச் சென்றேன். காரணம் ஊட்டச்சத்துக் குறைவின் காரணமாக அந்த மக்கள் மாலைக்கண் நோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகியிருந்தனர். ஆனால், அவர்கள் மருத்துவம், கல்வி எங்களுக்குத் தேவையில்லை, தண்ணீர்தான் மிக அவசியம் என்றனர். அதன்பிறகுதான் அங்கு தண்ணீருக்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினேன். இவையெல்லாம் 70-களில் தொடங்கிய பணியாகும். ராஜஸ்தான் மண்ணைப் பொறுத்தவரை ஆவியாதல் காரணமாக தண்ணீர் நிலத்திற்குள் ஊடுருவி தேங்குவது என்பது மிக சவாலான பணியாகும். ஆனால் வேதனைக்குரிய விசயம் என்னவென்றால், ராஜஸ்தானை ஒத்த பிரச்சனைக்குள் தற்போது மதுரையும் சிக்கியுள்ளது என்பதுதான்.

நிலத்தடி நீர் என்பது ரிசர்வ் வங்கி

இதற்காக ராஜஸ்தானிலுள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஆங்காங்கே நிறைய ஏரிகள், சிறு குளங்கள் மற்றும் தடுப்பணைகளைக் கட்டத் தொடங்கினோம். இதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் பெருகத் தொடங்கியது. நீரியல் மரபின்படி நிலத்தடி நீர் என்பது வங்கியில் வைக்கப்பட்டுள்ள வைப்புத் தொகைக்குச் சமமானது. மழையில்லாத வறட்சி காலத்தில் அதனை எடுத்துப் பயன்படுத்த முடியும். அப்படிதான் நாங்கள் ராஜஸ்தானில் செய்யத் தொடங்கினோம். இதன் காரணமாக தண்ணீர்ப் பஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்ற இளைஞர்கள் மீண்டும் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பி விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். ராஜஸ்தானின் மிகப் பின் தங்கிய 19 மாவட்டங்களைச் சேர்ந்த சற்றேறக்குறைய 17 லட்சம் இளைஞர்கள் 11 ஆயிரத்து 800 நீர்நிலைகளை உருவாக்கினர். இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் கிணறுகளில் தண்ணீர் ஊறத் தொடங்கின. இதனால் ஆயிரத்து 200 கிராமங்கள் தற்போது முழு விவசாயப் பணிகளுக்குத் திரும்பியுள்ளன. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பங்கேற்பால் ராஜஸ்தானில் 8, மகாராட்டிரத்தில் 2, கர்நாடகத்தில் 2 என மொத்தம் 12 ஆறுகள் உயிர்ப்பிக்கப்பட்டு தண்ணீர் ஓடச் செய்துள்ளோம்.

அழிவை நோக்கி வைகை

மதுரையைப் பொறுத்தவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால், வரலாற்றுச் சிறப்பு மிக்க வைகை தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வைகையில் தண்ணீர் ஓடுவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டுமானால், நிலத்தடி நீர்மட்ட உயர்வை உறுதி செய்ய வேண்டும். வைகைக்கான நீர் வரக்கூடிய நீர்ப்பிடிப்புப் பகுதிகள் பாதுகாக்கப்படுவது அவசியம். இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கான அனைத்து வழிவகைகளையும் மேற்கொள்ள வேண்டும். வைகை ஆற்றிற்குள் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதுடன், அதற்கான தனி மேலாண்மைத் திட்டம் அவசியம். மதுரை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் வைகை தொடர்பான விசயங்களில் தீவிர அக்கறை காட்டி வருவதை நான் அறிகிறேன். அதே போன்று நீதித்துறையும் அதிக கவனம் கொடுத்து வருகிறது. மதுரை மக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதுதான் சரியான தருணம் என நினைக்கிறேன். மதுரையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு நான் கலந்துரையாடியுள்ளேன். வைகையை மீட்டெடுப்பதற்கான தொடர் செயல்திட்டங்களையும் அவர்களுக்கு வகுத்துக் கொடுத்துள்ளேன். ஆகையால் நிச்சயம் வைகை ஆற்றுக்கு நம்பகத்தன்மைக்குரிய எதிர்காலம் உள்ளது என நம்புகிறேன்.

வைகையில் தண்ணீர் ஓட

கடந்த ஏழாண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பேசும்போது சில ஆலோசனைகளை முன் வைத்தேன். நீர்நிலைகள் சார்ந்த நிலப்பரப்பை மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதன் அடிப்படையில் நீர்நிலைகள் சார்ந்த நிலங்களை அடையாளப்படுத்தி பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளில் நிகழ்ந்து ஆக்கிரமிப்புகளை தயவுதாட்சண்யமின்றி அப்புறப்படுத்துவது அவசியம். மதுரையின் அடையாளமாகத் திகழக்கூடிய வைகையில் தண்ணீர் வரத்தை உறுதி செய்ய வேண்டுமானால், மேற்கண்ட நடவடிக்கைகள் மிக முக்கியம். இந்தக் கடமை பொதுமக்களுக்கு மட்டுமன்றி, மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கும் கட்டாயம் பொருந்தும். வைகை ஆற்றில் நீர் செல்வதற்கான நீர்ப்பிடிப்பு நிலங்களை அடையாளம் காண்பதும், அதனை ஒட்டியுள்ள காடுகள், நீர்நிலைகள் இவற்றையெல்லாம் பாதுகாப்பதும் அவசியம் எனக் கருதுகிறேன். இந்தப் பணிகள் அனைத்தையும் வைகையின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் விடுதலை யாத்திரை

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக ஒன்றிய அரசின் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை எந்தவித நிபந்தனையும் இன்றி திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் 1-ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை எனது தலைமையில் விவசாயிகள் விடுதலை யாத்திரை செல்கிறோம். அதன் ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் குருசாமி செயல்படுகிறார்" என்றார்.

பிரிட்டன் அரச குடும்ப அழைப்பின் பேரில் கடந்த 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராஜேந்திர சிங், அங்குள்ள தேம்ஸ் நதியின் கிளை நதி ஒன்றைப் பாதுகாப்பதற்காக நீருக்கான அமைதிப் பேரணியையும் நடத்தி ஆலோசனைகளும் வழங்கியுள்ளார். தமிழ்நாட்டின் நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடன் இயங்கி வரும் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங், தன்னுடைய நோக்கம் நிறைவேற பொதுமக்களையும் இளைஞர்களையுமே பெரிதும் நம்பியுள்ளார்.

இதையும் படிங்க: 'storming Operation' - ரவுடிகளை வேட்டையாடிய தமிழ்நாடு காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.