ETV Bharat / state

மாடக்குளம் கண்மாயில்  கழிவுநீர் கலப்பு - பொதுமக்கள் வேதனை - Madurai district news

மதுரை மாடக்குளம் கண்மாயில், அதன் கரையோர பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

waste-water-mingledd-in-madakulam-water-body
மாடக்குளம் கண்மாயில் கலக்கும் குடியிருப்புகளின் கழிவுநீர் - பொதுமக்கள் வேதனை
author img

By

Published : May 26, 2021, 11:47 AM IST

மதுரை: மதுரை மாநகரின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீராதாரங்களில் ஒன்றாக திகழ்வது மாடக்குளம் கண்மாய். பரப்பளவில் சற்று பெரியதாக இருக்கின்ற காரணத்தால் மதுரை மாநகரின் குடிநீர் தேவையையும் இக்கண்மாய் பூர்த்தி செய்கிறது.

கண்மாயின் கரையோரத்தில் விராட்டிபத்து, அச்சம்பத்து செல்லக்கூடிய சாலையில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் மாடக்குளம் கண்மாயில் கலக்கிறது.

இதுகுறித்து, குடியிருப்புவாசிகளிடம் மாடக்குளம் கிராமத்தார் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் மாடக்குளம் நீர்ப்பாசன குழுவினர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் இருந்த கழிவுகளை அப்புறப்படுத்திவிட்டு முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்தனர்.

மாடக்குளம் கண்மாய் கால்வாயை தூய்மைப்படுத்திய மக்கள்

இதுகுறித்து மாடக்குளம் நீர்ப்பாசன குழுத் தலைவரும், கிராம நாட்டாமையுமான குமார் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் மாடக்குளம் கண்மாய்க்கு நீரைக் கொண்டு வருவதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறோம். பொதுப்பணித்துறையினர் மூலம் எங்களுக்கு வழங்கப்படும் நீரானது எங்களது கண்மாய்க்கு இந்த வாய்க்கால் வழியாக செல்வது தான் வழக்கம்.

ஆனால் கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் குடியிருக்கும், குடியிருப்புவாசிகள் தாங்கள் வீடுகளில் பயன்படுத்திய நீரை கண்மாய்க்கு செல்லக்கூடிய வாய்க்காலில் கலக்க விடுகின்றனர். இந்தநிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலத்தில் நாங்கள் மக்களை ஒன்று திரட்டி அரசுக்கு எதிராகப் போராடக் கூடிய ஒரு நிலை வரும்" என்றார்.

தொடர்ந்து பேசிய கிராமவாசி பாண்டியராஜன், "மதுரைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த மாடக்குளம் கண்மாய் இவ்வாறு கழிவுநீர் கலப்பதால் ஒட்டுமொத்த மதுரைக்கே அபாயம் ஏற்படும். மாடக்குளம் கண்மாய் நிறைந்தால் மதுரை பெரியார் பேருந்து நிலையம் வரை உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் உயரும் அந்த வகையில் நீருக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய இந்த கண்மாயில் இவ்வாறு கழிவுநீர் கலப்பது வருத்தத்துக்குரிய விஷயம். எதிர்வரும் காலத்தில் இதை தடுக்க வேண்டும் அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `ப்ரோனிங்’ சிகிச்சை முறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.