ETV Bharat / state

தடுப்புச் சுவர் கட்டியதில் ஊழல் - ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! - Virudhunagar canal wall scam case

மதுரை: வத்திராயிருப்பு நொண்டி விருசு ஓடையில் தடுப்புச் சுவர் கட்டியதில் ஊழல் செய்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தடுப்புச் சுவர் கட்டியதில் ஊழல்: ஊழல் தடுப்பு துறை அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

author img

By

Published : Mar 20, 2020, 8:39 PM IST

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "வத்திராயிருப்பு ராமசாமியாபுரம் ஊராட்சியில் நொண்டி விருசு ஓடையில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.

ஆனால், தரமற்ற பொருள்களைக் கொண்டு தடுப்புச் சுவரைக் கட்டியதால் மூன்று மாதத்தில் முழுவதுமாக சேதமடைந்து, பயனற்ற நிலையில் காணப்படுகிறது. சேதமடைந்த தடுப்புச் சுவரை ஆய்வு செய்தபோது, அரசின் விதிகளின் படி தரமான பொருள்களைக் கொண்டு கட்டாமல், பிளாஸ்டிக் பைகளில் மணலை நிரப்பி தடுப்புச் சுவரின் உள்பகுதியில் வைத்துக் கட்டியது தெரிய வந்துள்ளது. ஆகவே, வத்திராயிருப்பு நொண்டி விருசு ஓடையில் தடுப்புச் சுவர் கட்டியதில் ஊழல் செய்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, "இது தொடர்பாக ஊழல் தடுப்புத் துறையின் இயக்குநர், நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் போராட்டங்களுக்கு அனுமதியில்லை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.