ETV Bharat / state

விஜயகாந்த் ’கிங்’காக இருக்கலாமே! - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - madurai district news

மதுரை: விஜயகாந்த் கிங்காக இருக்க வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் விருப்பப்படுவது அவர்களின் உரிமை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் கிங்காக இருக்கலாமே
விஜயகாந்த் கிங்காக இருக்கலாமே
author img

By

Published : Aug 26, 2020, 6:38 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 1 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "மதுரையில் கரோனா தடுப்பு பணி இரவு பகலாக மேற்கொண்டதன் பலனாக தொற்று குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டங்களில் முதலமைச்சர் மேற்கொள்ளும் சுற்றுப்பயனம் மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இ-பாஸ் எந்தவித சிரமமும் இல்லாத வகையில் எளிதாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உள்நோக்கம் கற்பிப்பது எதிர்கட்சி தலைவரின் வாடிக்கையாக உள்ளது.

விஜயகாந்த் கிங்காக இருக்கலாமே - ஆர்.பி உதயகுமார்

மத்திய அரசு கொடுக்கும் தளர்வுகளை முதலமைச்சர் கவனத்துடன் ஆய்வு செய்து கையாண்டு வருகிறார். தமிழ்நாட்டில் வேளாண் பணிகள் தடையின்றி செயல்பட்டதால் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவே தேமுதிக தெரிவித்துள்ளது. விஜயகாந்த் கிங்காக இருக்க வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் விருப்பப்படுவது அவர்களின் உரிமை" என்றார்.

இதையும் படிங்க: தமிழக அரசியல் களம் உங்களை காண காத்திருக்கிறது - விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.