ETV Bharat / state

குட்கா விற்பனை: விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முற்றுகை - madurai latest news

உசிலம்பட்டியில் குட்கா புகையிலைப் பொருள்கள் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி கடையை முற்றுகையிட்டனர்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முற்றுகை
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முற்றுகை
author img

By

Published : Jan 31, 2022, 5:26 PM IST

மதுரை: உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் பெட்டிக் கடை ஒன்றில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து மதுரை தேனி சாலையில் உசிலம்பட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உசிலம்பட்டி நகர தலைவர் சோலைமுத்து தலைமையில் இளைஞர்கள் அனைவரும் அக்குறிப்பிட்ட கடையை முற்றுகையிட்டனர்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்ததையடுத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முற்றுகை

மேலும் இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய அலுவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : வால்பாறை சாலையில் ஒற்றைப் புலி: காணொலி வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.