ETV Bharat / state

'எங்கள் கவலைகளின் தடுப்பூசியே' - பிறந்தநாள் போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள்! - நடிகர் விஜய்

மதுரையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'எங்கள் கவலைகளின் தடுப்பூசியே' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள்
விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள்
author img

By

Published : Jun 20, 2021, 5:10 PM IST

மதுரை: தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரமாகவுள்ள நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜுன் 22ஆம் தேதி ரசிகர்களால் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, இந்தாண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும்; பேனர், போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், மதுரையில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர், சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரையின் முக்கியப் பகுதிகளான பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்டப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள்

அந்த போஸ்டரில், 'எங்கள் கவலைகளின் தடுப்பூசியே' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், 'தமிழ்நாட்டில் இனி எப்போதும் தேவையில்லை டாஸ்மாக், அரசியலில் நீங்கள் வந்தால் மக்கள் தருவார்கள் பாஸ்மார்க்' என புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டிஆர் பேசியது போல ரைமிங்கான வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: ‘தம்பி வா தலைமை ஏற்க வா’ - விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.