ETV Bharat / state

தமிழ்நாடு மக்கள் உயிர் முக்கியமில்லையா? - மத்திய சுகாதார அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்!

மதுரை: மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டம் தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை என மத்திய சுகாதார அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மக்கள் உயிர் முக்கியமில்லையா?
தமிழ்நாடு மக்கள் உயிர் முக்கியமில்லையா?
author img

By

Published : May 6, 2021, 1:53 PM IST

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய சுகாதார அமைசருக்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'தேசிய சுகாதார முகமையின் இயக்குநர் மருத்துவர் சஞ்சய் ராய் வெளியிட்டுள்ள மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன். தமிழ்நாட்டிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

10 நாள்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு 280 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உயர்ந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசு சார் நிறுவனங்களின் சில மதிப்பீடுகளே 400 மெட்ரிக் டன் என்று கூறபடுகிறது.

தமிழ்நாடு மக்கள் உயிர் முக்கியமில்லையா?
தமிழ்நாடு மக்கள் உயிர் முக்கியமில்லையா?

மேலும், அவரது அறிக்கையின் மூலம் தமிழ்நாட்டிற்கு கூடுதல் ஒதுக்கீடு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. நான் ஒரு கேள்வியை மன வலியோடு எழுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். தமிழ்நாடு மக்கள் உயிர் முக்கியமில்லையா?

கடந்த செவ்வாய்கிழமை (மே 4) இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதற்கு, ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம்.

கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 447 பேரில் 309 பேருக்கு ஆக்சிஜன் தேவை. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இதுதான் நிலைமை.

சு.வெங்கடேசன் எம்பி கடிதம்!
சு.வெங்கடேசன் எம்பி கடிதம்!

ஒரு சில அரசு, தனியார் மருத்துவமனைகள் உயிர் பயத்தோடு வரும் நோயாளிகளை திருப்பி அனுப்பி வருகின்றன. ஓரிரு நாள்களில் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும்.

சு.வெங்கடேசன் எம்பி கடிதம்!
சு.வெங்கடேசன் எம்பி கடிதம்!

இந்நிலையில், ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டம் தமிழ்நாட்டிற்கு நீதி தரவில்லை. தமிழ்நாடு அரசின் தொடர் கோரிக்கைக்கு பின்பும் ஒதுக்கீடு அதிகரிப்பு மறுக்கப்பட்டுள்ளது.

நான் வருத்தத்தோடு சொல்கிறேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்புகள் ஏற்பட்டால் தமிழ்நாடு மக்களுக்கு மத்திய அரசே பதில் சொல்ல வேண்டி வரும் .

இது அவசர வேண்டுகோள். காலதாமதம் எதுவுமின்றி உங்கள் தலையீட்டை எதிர் நோக்குகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மக்கள் உயிர் முக்கியமில்லையா?
Aதமிழ்நாடு மக்கள் உயிர் முக்கியமில்லையா?

தமிழ் மண்ணில் ஒரு உயிர் கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால், வீழ்ந்து விடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.