ETV Bharat / state

கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது: வைகோ கண்டனம் - கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

மதுரை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கோலப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Vaiko c
Vaiko c
author img

By

Published : Dec 29, 2019, 10:36 PM IST

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ செய்தியாளர்களிடம், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கோலமிடுவது அடிப்படை உரிமை.

அறவழியில் கோலமிட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டிய அப்பெண்களை சாஸ்திரி நகர் காவல் துறையினர் தரக்குறைவாகப் பேசி மிரட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் பாசிச அடக்குமுறை. எனவே அப்பெண்களை விடுதலை செய்து, கைது செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

மதுரை விமான நிலையத்தில் வைகோ

மேலும் பேசிய அவர், "இரண்டு நாள்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஜெகதாபட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 13 படகுகள் பறிமுதல்செய்யப்பட்டிருக்கின்றன. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு மீனவர்களை இந்தியக் குடிமகனாகவே நினைக்கும் மனோபாவம் மத்திய அரசிடம் இல்லை. தமிழ்நாடு மீனவர்களை விரோதியாக கருதுவதுபோல் நரேந்திர மோடி அரசு செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது" என்றார்.

இதையும் படிங்க: ‘கோலம் போட்டது ஒரு குற்றமா’ - இளைஞர்களைக் கைது செய்த காவல் துறை, ஸ்டாலின் கண்டனம்!

Intro:*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்Body:*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்*

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராகவும், நாடெங்கும் சாதி மத எல்லைகளைக் கடந்தும், கட்சி எல்லைகளைக் கடந்து பெரும் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கோலமிடுவது அடிப்படை உரிமைகளில் ஒன்றனது, அறவழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக பெண்கள் கோலம் போட்டு இருக்கிறார்.

பெசன்ட் நகரில் பெண்கள் கோலமிட்டு இருக்கிறார்கள் அவர்களை சாஸ்திரி நகர் போலீசார் தரக்குறைவாக பேசி மிரட்டியிருக்கிறார்கள், தங்கள் கருத்துக்களை கோலத்திலே பதிவிடுவது என்பது மார்கழி மாதத்திலே அதிகாலையில் கோலம் போடுவது வழக்கம். இதுபோன்ற நடைவெடிக்கைகள் இந்த அரசாங்கத்திற்கு தவறானது. அவர்களை விடுதலை செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்யப்பட வேண்டும். இதில் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஜெகதாபட்டினம் மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டு, 13 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. கைது செய்யப்பட்டதாக அவருடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே அவர்களை மூன்று ஆண்டுகள் சிறையில் வைக்கவும், லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கும் சட்டம் கொண்டு வருவதை நரேந்திர மோடி அரசு எதிர்ப்பதை தவறிவிட்டது. அந்த கடமையை செய்யவில்லை.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் இலங்கை கடற்படை தாக்கி இருக்கிறது. தமிழக மீனவர்களை இந்தியக் குடிமகனாகவே நினைக்கின்ற மனோபாவம் மத்தியில் இல்லை. ஒத்துமையா அரசாங்கத்துக்கு அவர்கள் என்ன செய்தாலும் அதை தட்டிக் கேட்பது இல்லை என்ற விதத்தில் தமிழர்களுக்கு விரோதமாக, ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக தமிழக மீனவர்களை கருதுவது, நரேந்திர மோடி அரசு செயல்படுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.