ETV Bharat / state

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! - மதுரை போக்குவரத்து மாற்றம்

மதுரை: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இரண்டு தரைப்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Vaigai river Flooding
Vaigai river Flooding
author img

By

Published : Dec 24, 2019, 2:02 PM IST

தேனி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் தற்போது சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நீர் இருகரைகளையும் தொட்டுக் கரைபுரண்டோடுகிறது. இதனால் மதிச்சியம் பகுதியையும், முனிச்சாலை பகுதியையும் இணைக்கும் ஓபுளா படித்துறை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் கல் பாலம் மூழ்கியுள்ளதால், இவ்விரு பாலங்களிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வைகை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் குளிக்கவும், வாகனங்களை கழுவுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்து!

Intro:*வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - இரண்டு தரைப்பாலம் களிலும் போக்குவரத்து தடை*Body:*வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - இரண்டு தரைப்பாலம் களிலும் போக்குவரத்து தடை*

தேனி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மதுரை வைகை ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக மதுரை மாநகர் பகுதியில் உள்ள பழமையான கல் பாலம் மற்றும் ஓபுளா படித்துறை பாடங்களில் போக்குவரத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏற்கெனவே தொடா் மழை காரணமாக வைகை ஆற்றில் நீா்வரத்து அதிகம் இருந்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் வைகை ஆற்றின் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீா் கரைபுரண்டோடியது. காலையில் கல்பாலத்தை தொட்டு விடும் அளவுக்கு தண்ணீா் சென்றது.

அத்துடன் மதிச்சியம் பகுதியையும், முனிச்சாலை பகுதியையும் இணைக்கும் ஓபுளா படித்துறை தரைப்பாலத்தையும் தண்ணீா் மூடிச்சென்ால் அந்த பாலத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

வைகை ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில் மதுரை நகரில் வைகை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றில் குளிக்கவும், வாகனங்களை கழுவுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.