மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த சாம் டேவிட் லிவிங்ஸ்டன், இங்கிலாந்தில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார். இவர் இங்கிலாந்தின் ப்ரஸ்டன் பகுதியைச் சேர்ந்த சாரா எலிசபெத் என்பவரைக் காதலித்து, கடந்த ஆண்டு மே 21ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.
கரோனா காரணமாக தமிழ்நாடு வரமுடியாமல் தவித்து வந்த இத்தம்பதியினர், தமிழ்நாடு திரும்பிய உடன் ஏ.ஜி. தேவாலயத்தில், வரவேற்பு நடைபெற்றது. இவ்விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும், மரக்கன்றுகளை வழங்கிய மணமக்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து சாரா எலிசபெத் கூறுகையில், ''இங்குள்ள மக்கள் அன்பு செலுத்துவது மிகவும் பிடித்துள்ளது. இக்கிராமங்கள் மிக அழகாக உள்ளன. பண்பாடு, உடை மற்றும் உணவு முறைகள் மிகவும் பிடித்துள்ளன. குறிப்பாக அரிசியில் தயாரிக்கப்பட்ட சோறு, சப்பாத்தி, சிக்கன் பிரியாணி என இந்திய உணவு வகைகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: காயம்பட்ட கடல் ஆமைகள் - 2 ஆண்டுகளுக்கு பின் கடலில் விடுவிப்பு