ETV Bharat / city

சாதிச் சான்றிதழ் இல்லாததால் மருத்துவப் படிப்பைத் தொடர முடியாத பழங்குடி மாணவி! - Coimbatore News

கோவை: சாதிச் சான்றிதழ் இல்லாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் பழங்குடி மாணவி ஒருவர் பரிதவித்துவருகிறார்.

சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவ படிப்பை தொடர முடியாத பழங்குடி மாணவி!

author img

By

Published : May 11, 2020, 8:35 PM IST

Updated : May 15, 2020, 9:29 AM IST

மழையில் ஒழுகும் ஓலைக் குடிசைகள், பாதியில் நிற்கும் பசுமை வீடுகள், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, படிப்பைப் பாதியில் நிறுத்தும் மாணவர்கள். இது, ஏதோ அடர் வனத்திற்குள்ளோ, மலைகளில் வாழும் பழங்குடிகளின் நிலையில்லை. இது கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள ரொட்டி கவுண்டன்புதூர் பகுதியில் சமவெளிப் பகுதியில் வாழும் மலசர் பழங்குடி நிலை.

காடு, மலைகளில் வாழும் பழங்குடிகளுக்குக் கிடைக்கும் அடிப்படை வசதிகள்கூட சமவெளியில் வசிக்கும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இங்கு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இப்பழங்குடிகளுக்கு, சுற்றுவட்டார விவசாயத் தோட்டங்களில் உள்ள கூலி வேலையை நம்பித்தான் வாழ்வாதாரத்தைக் கடத்திவருகின்றனர்.

குறுகிய ஓலைக்குடிசையில் பொருள்களை அடைத்துவைத்து, குடும்பம் நடத்துவதே பெரும்பாடாக உள்ளது. மழைக்காலத்தில் இவர்களின் சிரமங்களைச் சொல்லி மாளாது. சிலருக்குப் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டாலும், எல்லாம் பாதியில் நிற்கிறது.

6 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறையும் பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளும் இன்னும் வந்து சேரவில்லை. இரவு மட்டுமல்ல பகலும் தங்களுக்கு இருட்டாகவே உள்ளதாகப் பழங்குடிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இப்படி அடிப்படை வசதிகளைப் போலவே அரசின் அடையாள அட்டைகள் கிடைக்காத நிலையில், அடையாளம் அற்றவர்களாக வாழ்கின்றனர். பலருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை இல்லாததால் அரசின் சலுகைகளைப் பெற முடியாத நிலை உள்ளது. பள்ளிச் செல்லும் இப்பகுதி மாணவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் கல்வியைத் தொடர தடையாக உள்ளது.

பழங்குடி சாதி சான்றிதழ் பெறுவது சிரமமாக இருப்பதாகவும், இதனால் இடைநிற்றல்கள் அதிகமாக உள்ளதாக அப்பழங்குடிகள் தெரிவித்தனர். இந்தச் சூழலில் அக்கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் வசந்தாமணி தம்பதியின் 19 வயது மகள் சங்கவி, இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்துள்ளார்.

சிறுவயது முதல் மருத்துவராக வேண்டுமென்ற லட்சியத்தோடு படித்த சங்கவிக்கு, சாதி சான்றிதழ் தடையாக உள்ளது. இதனால் தனியார் கல்லூரியில் சேர்ந்த அவர், சில மாதங்களில் படிப்பைப் பாதியில் கைவிட்டார். சில நாள்களுக்கு முன்பு சங்கவி தந்தை மரணமடைய, அக்குடும்பம் நிலை குலைந்துபோயுள்ளது.

சாதிச் சான்றிதழ் இல்லாததால் மருத்துவப் படிப்பைத் தொடர முடியாத பழங்குடி மாணவி!

பலமுறை சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தும், தனக்கு இதுவரை சாதிச் சான்றிதழ் கிடைக்காததால், மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை எனக் கூறுகிறார் சங்கவி.

சாதிச் சான்றிதழும், உதவிக்கரமும் கிடைத்தால் நீட் தேர்விற்கு தயாராகி மருத்துவக் கனவை நனவாக்க முடியுமென அவர் கூறினார். கிராமத்திலுள்ள அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுவதால் அனைவருக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது அப்பழங்குடிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க...சிறுமியை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்' - ஸ்டாலின்

Last Updated : May 15, 2020, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.