மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பந்தடி தெருவில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடுபோவதால் அப்பகுதி மக்கள் வீட்டின் முன்பு சிசிடிவி கோமராக்களை பொருத்தினர். அத்துடன் பாதுகாப்பு பணிக்காக செக்யூரிட்டி ஒருவரையும் நியமனம் செய்து கவனித்துவந்தனர். இந்த நிலையில் நேற்று(ஜூலை 25) அதிகாலை இருவர் அத்தெருவிலுள்ள இருசக்கர வாகனத்தை திருடினர்.
அப்போது அவர்களை செக்யூரிட்டி தடுக்க முயன்றுள்ளார். பதற்றமடைந்த திருடர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை தாக்கல் முயன்றனர். அந்தக் காட்சிகள் அருகிலுள்ள சிசிடிவி கோமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அவை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த தெற்குவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கடத்தல்காரர்களிடம் போராடி குழந்தையை மீட்ட தாய் - வெளியான சிசிடிவி காட்சி!