ETV Bharat / state

மதுரை அருகே கோர விபத்து; முன்னாள் கவுன்சிலர் உள்பட இருவர் உயிரிழப்பு - madurai district news

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே நடைபெற்ற இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் முன்னாள் கவுன்சிலர் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

two-wheeler-accident-in-nagamalai-puthukottai-two-were-died
மதுரை அருகே கோர விபத்து; முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் பலி
author img

By

Published : Feb 2, 2021, 10:43 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரின் மகன் கோபு (49) முன்னாள் கவுன்சிலராக இருந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் புண்ணியமூர்த்தி (50) என்பவரும் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.

நேற்றிரவு வேலையை முடித்து விட்டு மதுரையில் இருந்து நாகமலை புதுக்கோட்டை வழியாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில், முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்தின் அருகே இருந்த நபர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபோன்ற விபத்துகள் இந்தப் பகுதியில் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரையை கலக்கும் சசிகலா ஆதரவு சுவரொட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.