ETV Bharat / state

அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் உயிரிழப்பு!

மதுரை: அய்யங்கோட்டை அருகே அரசுப் பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியதில் இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரண்டு பேர் உயிரிழப்பு
இரண்டு பேர் உயிரிழப்பு
author img

By

Published : Aug 18, 2021, 8:10 AM IST

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் (24), கருப்புசாமி (48). இவர்கள் இருவரும் நேற்று (ஆக.17) தங்கள் இருசக்கர வாகனத்தில் அய்யங்கோட்டை பகுதியிலுள்ள மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது அவ்வழியே மதுரையிலிருந்து-கோவை நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்று, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சதீஷ், கருப்புசாமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வாடிப்பட்டி காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய அரசு பேருந்து ஓட்டுநரை தற்போது தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி உணவகத்தில் தீ விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.