ETV Bharat / state

வைகை ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு! - ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

மதுரை: வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகை ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

author img

By

Published : Dec 7, 2020, 5:22 PM IST

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் அருகேவுள்ள மறவர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்து. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த பெண் குழந்தைகளான சுஜி, ஸ்ருதி ஆகிய இருவரும் நேற்று (டிச.06) மாலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமிகளைத் தேடினர். பின்னர், சிறுமிகளைக் காணவில்லை என கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், இரண்டு சிறுமிகளும், உயிரிழந்த நிலையில் ஆரப்பாளையம், எல்.ஐ.சி ஆகிய வெவ்வேறு இடங்களில் உயிரிழந்த நிலையில் மிதந்துள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.