தென் மாவட்டங்களில் மிக முக்கியமான விறகு சந்தையாக விளங்கக்கூடிய மதுரை மாட்டுத்தாவணி விறகு சந்தைக்கு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இருந்து விறகு லோடு ஏற்றி வந்த லாரி மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது லாரியின் பின்பக்க டயர் வெடித்ததால் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
மேலும் லாரியின் உள்ளே சிக்கிய ஓட்டுநர் மருதுபாண்டியை மீட்ட பொதுமக்கள் அருகே இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். மேலும் சாலை முழுவதும் விறகுகள் சிதறியதால் அந்த பகுதியில் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாலை நேரம் என்பதால் வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள், பயணிகள் வரத்து அதிகம் இருந்த காரணத்தால் அந்த பகுதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர்- செந்தில் பாலாஜி