இது குறித்து தென்னக ரயில்வே இன்று (மார்ச் 10) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வண்டி எண் 06125 திருச்சி-காரைக்குடி சிறப்பு விரைவு ரயில் மார்ச் 15ஆம் தேதிமுதல் மறு அறிவிப்பு வரும்வரை திருச்சியிலிருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.05 மணிக்கு காரைக்குடி சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06126 காரைக்குடி- திருச்சி விரைவு சிறப்பு ரயில் மார்ச் 16ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும்வரை காரைக்குடியிலிருந்து காலை 7.00 மணிக்குப் புறப்பட்டு காலை 9.05 மணிக்கு திருச்சி சென்று சேரும்.
இந்த ரயில்கள் குமாரமங்கலம், கீரனூர், வெள்ளனூர், புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, கோட்டையூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் பயணத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பாகப் பயணச் சீட்டுகள் வாங்கிப் பயணம் மேற்கொள்ளலாம்.
இதுபோன்ற ரயில்கள் மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர், விருத்தாசலம் - சேலம், திருச்சி - கரூர், சென்னை - புதுச்சேரி, தாம்பரம் - விழுப்புரம், கொல்லம் - ஆலப்புழா, எர்ணாகுளம் - ஆலப்புழா, சோரனூர் - எர்ணாகுளம், சோரனூர் - கண்ணனூர் ஆகிய வழித்தடங்களிலும் இயக்கப்பட இருக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 ஆண்டுக்கு பின்னர் வந்த ரயில் என்ஜினை வரவேற்ற தேனி மக்கள்!