ETV Bharat / state

திருநெல்வேலி - தென்காசி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்! - Southern Railway

திருநெல்வேலி - தென்காசி மின்மயமாக்கப்பட்ட பிரிவில் ரயிலின் வேக சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி - தென்காசி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!

author img

By

Published : Mar 13, 2023, 8:40 PM IST

மதுரை: தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, இன்று (மார்ச் 13) புதிதாக மின்மயமாக்கப்பட்ட திருநெல்வேலி (தவிர) மற்றும் தென்காசி (உள்பட) இடையே 72.02 கிலோ மீட்டர் நீள ரயில் பாதையில், சட்டப்பூர்வ ஆய்வுப் பணியை முடித்து, மின் என்ஜின் இணைக்கப்பட்ட சோதனை ரயிலைப் பயன்படுத்தி வேக சோதனை நடத்தினார். இந்த ஆய்வு திருநெல்வேலியில் இருந்து இன்று காலை 9.50 மணிக்குத் தொடங்கியது.

இந்தப் பிரிவில், முதன்மை தலைமைப் பொறியாளர் புதிதாக உருவாக்கப்பட்ட மின்சார கட்டுமானங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை மின் அமைப்புகள் (OHE), பிற மின்சார கம்பிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை மின் அமைப்புகளின் மின் இணைப்புகள், சாலை மேம்பாலங்கள் மற்றும் நடை மேம்பாலங்கள் ஆகியவற்றில் பின்பற்றப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரி செய்தார்.

அதேபோல் அம்பாசமுத்திரம் ரயில் நிலையம், பேட்டையில் நிறுவப்பட்டுள்ள மின் அமைப்புகள், அம்பாசமுத்திரம் மற்றும் கீழக்கடையம் இடையே உள்ள லெவல் கிராசிங் எண் 67 ஆகியவற்றிலும் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் மின்மயமாக்கப்பட்ட பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் பணிபுரியம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருவிகள் ஆகியவை சோதனை செய்யப்பட்டன.

இந்த ஆய்வு தென்காசியில் பிற்பகல் 2.10 மணிக்கு நிறைவடைந்தது. வேக சோதனை சிறப்பு சோதனை ரயில், தென்காசியில் இருந்து பிற்பகல் 3.37 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.52 மணிக்கு திருநெல்வேலி வந்தடைந்தது. இந்த சோதனையின்போது, ரயில் அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியது. இந்த ஆய்வின்போது, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பி.அனந்த், சென்னை ரயில்வே மின்மயமாக்கல் தலைமை திட்ட இயக்குனர் (சிபிடி) சமீர் திகே, மதுரை ரயில்வே மேன்மையும் மக்கள் துணை தலைமை மின் பொறியாளர் எம்.எஸ்.ரோகன், மூத்த கோட்ட மின் பொறியாளர் பச்சு ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு சோதனை செய்யப்பட்ட திருநெல்வேலி - தென்காசி இடையே தினந்தோறும் இரு மார்க்கமாக மொத்தம் 10 ரயில் சேவைகள் உள்ளன. இதில் செங்கோட்டை மற்றும் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் கீழப்புலியூர், பாவூர்சத்திரம், மேட்டூர், கீழக்கடையம், ராவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விரவநல்லூர், கரைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை மற்றும் திருநெல்வேலி டவுண் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல் திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக பாலக்காடு சென்று வருகிறது.

இதையும் படிங்க: புத்துயிர் பெறும் ராமேஸ்வரம் ரயில் நிலையம் - நவீனமயமாக்கும் பணிகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.