மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது.
இதற்கிடையில் இன்று (செப்.19) மாவட்டத்தில் 68 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,792 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 14 ஆயிரத்து 655 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 760 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சிகிச்சைப் பலனின்றி 377 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.