சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் நிர்வாக நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜூலை மூன்றாம் தேதிமுதல், உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதியாக எம். சத்தியநாராயணன் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கான பல்வேறு வகை மனுக்கள், வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் விவரம்:
நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் அமர்வு- பொதுநல மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்கள், அனைத்துவகை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்
நீதிபதிகள் கே. கல்யாணசுந்தரம், டி. கிருஷ்ண வள்ளி அமர்வு - அனைத்து வகை ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள்
நீதிபதி வீ. பாரதிதாசன்- ஜாமின், முன்ஜாமின் உள்ளிட்ட வழக்குகள்
நீதிபதி டி. கிருஷ்ணகுமார்- கல்வி, நிலச்சீர்திருத்தம் , நிலம் கையகப்படுத்துதல் ஆகியவை தொடர்பான வழக்குகள்
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்- மோட்டார் வாகன வரி, வரி தொடர்பான வழக்குகள், ஏற்றுமதி- இறக்குமதி தொடர்பான வழக்குகள், கனிம வளம் தொடர்பான வழக்குகள், தொழிற்சாலை மற்றும் வனம் தொடர்பான வழக்குகள்.
நீதிபதி பி.புகழேந்தி- குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள், சிபிஐ, ஊழலுக்கு எதிரான வழக்குகள்