ETV Bharat / state

மனித உரிமைக்கான போராட்டம்: சர்வதேச விருது பெற்ற எவிடென்ஸ் கதிர் - சிறப்பு நேர்காணல்

ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்ட மனித உரிமைகளுக்கான களத்தில் தொடர்ந்து போராடியதன் அடிப்படையில் 'ராவுல் வாலன்பெர்க்' எனும் விருதை ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் கதிருக்கு இந்த ஆண்டு வழங்கி சிறப்பித்துள்ளது.

எவிடென்ஸ் கதிர் சிறப்பு நேர்காணல்
எவிடென்ஸ் கதிர் சிறப்பு நேர்காணல்
author img

By

Published : Jan 21, 2022, 5:05 PM IST

மதுரை: தெற்காசியாவிலேயே முதன்முறையாக 'ராவுல் வாலன்பெர்க்' எனும் விருதைப் பெற்றுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் 'எவிடென்ஸ்' கதிர் என்ற வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

அப்போது அவர் பேசியதாவது, "ஐரோப்பாவிலுள்ள 47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் கவுன்சில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அமைப்பாகும். மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் பணி செய்பவர்களைத் தேர்வு செய்து இந்த விருதை வழங்கி வருகிறார்கள்.

தற்போது 5ஆவது முறையாக, தெற்காசியாவிலேயே முதலாவதாக இந்த விருது எனக்குக் கிடைத்துள்ளது என்பது 'சாட்சியம்' அமைப்பு மேற்கொண்ட பணிகளுக்குக் கிடைத்த பெருமையாகும்.

மனித உரிமை மீறல்

கடந்த ஜனவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற இணையவழி நிகழ்ச்சியில், ராவுல் வாலன்பெர்க் விருதுக்காக மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகி 'வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி' தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தபோது, மொத்த அரங்கமும் ஒரு கணம் அதிர்ந்துதான் போனது.

ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான போராட்டத்தில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, இதுவரை மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் நிகழ்வுகளில் 25 ஆயிரம் பேரை காப்பாற்றியுள்ளார் என்பது அத்தனை எளிதானது அல்ல.

எவிடென்ஸ் கதிர் சிறப்பு நேர்காணல்

அர்ப்பணிப்பு உணர்வு தேவை

சமூகப் பணியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். 3 ஆயிரம் மனித உரிமை மீறல் நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளேன். 25 ஆயிரம் பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இதற்காக பல்வேறு முறை தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறேன்.

கொல்வதற்கும் முயன்றிருக்கிறார்கள். மனித உரிமைப் பணி என்பது சவால் நிறைந்தததாகும். அதே சமயத்தில் சகிப்புத்தன்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் அதிகம் தேவைப்படுகின்ற பணியாகும். ஆகையால் இந்த விருது பாதுகாப்பையும், தெம்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வருகின்ற இளையதலைமுறையினருக்கும் மனித உரிமைப் பணிகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

ராவுல் வாலன்பெர்க்

இரண்டாம் உலகப்போரின்போது ஹங்கேரி யூதர்கள் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றியவர் ஸ்வீடனைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ராவுல் வாலன்பெர்க். இதற்காக நடைபெற்ற போராட்டத்தின் அடிப்படையில் கடந்த 1945ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நாளை நினைவுகூர்ந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காகச் செயல்படும் நபர்களை ஊக்குவிக்க கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்வீடன் மற்றும் ஹங்கேரிய அரசுகளால் ராவுல் வாலன்பெர்க் விருது வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச விருது

ராவுல் வாலன்பெர்க் என்ற இந்த சர்வதேச விருது, இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கே சொந்தமானது. வாங்குவதற்கு நான் கருவியாக மட்டுமே இருந்தேன். மக்கள் பணி என்பது மிகப் பெரிய வரம்.

எல்லோருக்கும் அந்த வாய்ப்புக் கிடைத்துவிடாது. தமிழகத்தில் ஏதாவதொரு இடத்தில் மனித உரிமை மீறல் நடந்தால்கூட, கதிரைக் கூப்பிடுங்கள் என்ற அளவிற்கு உயர்ந்ததன் காரணம் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை. இங்குள்ள எளிய மக்களைவிட நான் பெரியவன் அல்ல. நியாயம் கிடைக்கும் என்று நம்புகின்ற அந்த நம்பிக்கைக்குக் கிடைத்த விருதாகவே நான் இதை பார்க்கிறேன்" என்றார்.

போராளிகளே உத்வேகம்

மேலும் இந்த விருதை தனக்காகப் பரிந்துரை செய்த அருட்தந்தை அலோசியஸ் இருதயத்தை எவிடென்ஸ் கதிர் நன்றியுடன் நினைவு கூறுகிறார். மனித உரிமை செயற்களத்தில் பணியாற்றி வரக்கூடிய பல்வேறு போராளிகளே தனக்கு உத்வேகம் அளிப்பதாக பெருமையுடன் பகிர்கிறார்.

தாங்கள் பெற்ற விருதாகவே எல்லோரும் எண்ணுவதைவிட தனக்கு வேறு எதுவும் பெருமையில்லை என்கிறார் கதிர். விருது பெறும் நிகழ்வில்கூட தன்னுடைய உரையில் 'எல்லாப் புகழும் மக்களுக்கே' என்று குறிப்பிட்டதை பெருமையோடு நினைவுபடுத்துகிறார். நடிகனையும், அரசியல்வாதியையும் கொண்டாடுகின்ற தமிழ்நாட்டில் தன்னைப் போன்ற மக்கள் தொண்டர்களையும் கொண்டாடி மகிழ்வது பெருமைக்குரியதுதானே என்கிறார் கதிர்.

தாய்மையின் தியாகம்

மனித உரிமை போர்க்களத்தில் நிகழும் பல்வேறு அத்துமீறல்களை உடனுக்குடன் களத்திற்கே சென்று நிவர்த்தி செய்யப் போராடி, அதற்காக அவச்சொற்களையும் சுமந்து, பழிகளையும் ஏற்றுக்கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை தாய்மையின் தியாகத்திற்கு ஒப்பானது.

மதம், சாதி, அரசியல் என பல்வேறு ஆதிக்க முகங்களைக் கொண்ட இந்திய சமூக வாழ்வியலில் உரிமைகளுக்காகப் போராடுவதென்பது மிக மிக சவால் நிறைந்ததாகும். அந்தப் பணிக்காக 'எவிடென்ஸ்' கதிர் பெற்றுள்ள ராவுல் வாலன்பெர்க் விருது, மனித உரிமைக் களத்தில் தூண்டிவிடப்பட்டுள்ள சுடரொளி. இதனைக் கையிலேந்தி தொடர்ந்து பயணிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் ஆனதாகும்.

இதையும் படிங்க: வெற்றி... வெற்றி... வெற்றி! வாகைசூடிய வீரத்தமிழச்சி யோகதர்ஷினி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.