ETV Bharat / state

கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மூவர் பலி - நால்வர் படுகாயத்துடன் மீட்பு - madurai

மதுரை: கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிட உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மூவர் பலி - நால்வர் படுகாயத்துடன் மீட்பு
author img

By

Published : Jul 6, 2019, 11:10 PM IST

மதுரையில், கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்று நேற்று சரிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாயினர். நான்கு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, கட்டிட உரிமையளார் மாதவனை செக்கானூரனி காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், மீட்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் ராஜசேகர் கூறுகையில், "ஒப்பந்ததாரர் மாதவன் பெயரில் இதுவரை அனுமதி பெற்றதற்கான எந்த சான்று இல்லை. வேறு யாராவது பெயரிலாவது அனுமதி பெற்று இருக்கிறார்களா? எத்தனை தளத்திற்கு அனுமதிப் பெற்று உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்விடத்தில், ஏற்கனவே இருந்த கிணற்றினை மூடி அதில் எழுப்பப்பட்டிருந்த தூண் சரிந்ததால் இந்த விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.

கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மூவர் பலி - நால்வர் படுகாயத்துடன் மீட்பு

இந்த சம்பவத்தை நேரில் கண்ட கவிதா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் கூறுகையில், "7 பேர் வேலை செய்து கொண்டிருக்கும்போதே திடீரென பெரும் சத்தத்துடன் அந்தக் கட்டடம் சரிந்தது. அப்போது,எதிரே உள்ள கட்டடத்தில் வேலை பார்த்த நபர்கள் ஓடிவந்து சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். கட்டடம் இடிந்து விழுந்ததும் இந்தப் பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டம் ஆனதால் எதுவும் தெரியாத நிலையில் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்றனர்.

இச்சம்பவம் குறித்து செக்காணூரணி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Intro:கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மூவர் பலி - நால்வர் படுகாயத்துடன் மீட்பு - ஒப்பந்ததாரர் மாதவன் கைது

மதுரை நடைபெற்ற கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாயினர். நான்கு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வீட்டின் ஒப்பந்ததாரர் மாதவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Body:கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மூவர் பலி - நால்வர் படுகாயத்துடன் மீட்பு - ஒப்பந்ததாரர் மாதவன் கைது

மதுரை நடைபெற்ற கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாயினர். நான்கு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வீட்டின் ஒப்பந்ததாரர் மாதவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே அரசு கள்ளர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறமுள்ள பசும்பொன் தெருவில் மாதவன் என்பவரால் தரை, முதல் மற்றும் இரண்டாம் தளங்களைக் கொண்ட புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, தற்போது மின் இணைப்பு வேலைகள் நடைபெற்று வந்தன.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பணியாளர்கள் 7 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை 5 மணியளவில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென வீடு சரிந்தது. ஒப்பந்ததாரர் மாதவன் வீட்டின் மொட்டை மாடியில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தவாறு குதித்து தப்பியோடினார்.

முதல் மற்றும் தரைத் தளங்களில் வேலை செய்து கொண்டிருந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அக்கம்பக்கத்திலுள்ளோர் திரண்டு வந்து மீட்க முயன்றனர். பிறகு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத் துறையினருக்குத் தகவல் அளித்து, அவர்கள் மீட்புப் பணிகளில் துரிதமாக இறங்கினர்.

அவர்களில் கார்த்திக் (28), ராஜேஷ் (30), முருகன் (36) ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நான்காவதாக மீட்கப்பட்ட காசிநாதன் வழியிலேயே இறந்துவிட்டார்.

இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கிய மூவரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது. மீட்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், தென் மண்டல காவல் துறை துணைத் தலைவர் ஆனி விஜயா, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் ராஜசேகர் கூறும்போது, 'ஒப்பந்ததாரர் மாதவன் பெயரில் இதுவரை அனுமதி பெற்றதற்கான சான்று இல்லை. அவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். வேறு யாராவது பெயரிலாவது அனுமதி பெற்று இருக்கிறார்களா? எத்தனை தளத்திற்கு அனுமதிப் பெற்று உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே இருந்த கிணற்றினை மூடி அதில் எழுப்பப்பட்டிருந்த தூண் சரிந்ததால் இந்த விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது' என்றார்.

அதன் பிறகு நடைபெற்ற மீட்புப்பணியின்போது 5-ஆவது நபராக முத்துப்பாண்டி (34) என்பவர் மீட்கப்பட்டார். தொடர்ந்து கட்டடம் சரிந்து கொண்டிருந்த நிலையில், உள்ளே சிக்கியிருந்த அருண் மற்றும் பாலு ஆகியோரை மீட்கும்பணி இரவு முழுவதும் நடைபெற்றது.

இதுகுறித்து இந்த சம்பவத்தை நேரில் கண்ட கவிதா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் கூறுகையில், ஐந்து மணியளவில் கட்டடத்திற்குள் 7 பேர் வேலை செய்து கொண்டிருக்கும்போதே திடீரென பெரும் சத்தத்துடன் அந்தக் கட்டடம் சரிந்தது. அப்போது அந்த சமயத்தில் அருகில் ஒருவரும் இல்லை. எதிரே உள்ள கட்டடத்தில் வேலை பார்த்த நபர்கள் ஓடிவந்து சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். கட்டடம் இடிந்து விழுந்ததும் இந்தப் பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டம். ஆகையால் எதுவும் தெரியாத நிலையில் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை' என்றனர்.

நள்ளிரவு வரை நடைபெற்ற மீட்புப் பணியில் இடிபாடுகளில் சிக்கியிருந்த அருண்குமார் (21), பாலு (55) ஆகியோர் பேரிடர் மீட்புக் குழுவினரால் பிணமாகவே மீட்க முடிந்தது. இந்த சம்பவம் செக்காணூரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் செக்காணூரணி, உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் பகுதியிலிருந்து தீயணைப்பு வீரர் மற்றும் வாகனங்கள் வந்திருந்து மீட்புப்பணிகளை விரைவுபடுத்தினர்.

மேலும் இச்சம்பவம் குறித்து செக்காணூரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.