மதுரை அனுப்பானடியில் அமைந்துள்ளது ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில். இக்கோயிலின் மூன்றாவது குடமுழுக்கு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மிகவும் புகழ்பெற்ற, புராதன மிக்க இத்திருக்கோயிலின் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு நடத்துவதற்காக, கடந்த வாரம் மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இதன் முக்கிய வைபவமான இன்று நடைபெற்ற திருக்குடமுழுக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி விமலா, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உள்பட பல்வேறு பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி கோஷத்துடன் யாகசாலையில் கலசங்களில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரைக் கொண்டு வைதீக முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குடமுழுக்கு நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்க: 26 நாட்களில் ரூ. 58 லட்சம் காணிக்கை - சுப்ரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் அறிவிப்பு