ETV Bharat / state

வைகாசி விசாகம்; களைகட்டிய திருப்பரங்குன்றம் திருவிழா! - முருகன் கோவில்

மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பன்னீர் காவடி, இளநீர் காவடி, பறவைக் காவடி எடுத்து அரோகரா கோஷத்துடன் கூடினர்.

Thirupparankundram
author img

By

Published : May 18, 2019, 6:38 PM IST

Updated : May 18, 2019, 7:14 PM IST

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி மாத வசந்த விழா கடந்த 9ஆம் தேதி துவங்கியது. விழாவின் நிறைவாக வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பால்குடம் எடுத்து வந்தனர். ஸ்ரீ முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாகப் பெருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்காண விசாகத்திருவிழா, கடந்த 9ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவை ஒட்டி தினமும் இரவு 8 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்துடன் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்துக்கு முருகன் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகாசி விசாகத்தையொட்டி, சனிக்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
18.05.2019

தமிழ் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் முதல்படை விமான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பன்னீர்காவடி ,இளநீர் காவடி, பறவை காவடி எடுத்தனர். அரோகரா, அரோகரா கோஷத்துடன் குவிந்த பக்தர்கள் .

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் வைகாசி மாத வசந்த விழா கடந்த 9ம் தேதி துவங்கியது விழாவின் நிறைவாக வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பால்குடம் எடுத்து வந்தனர்.

ஸ்ரீ முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாகத் பெருவிழா முக்கியமானதாகும்..
இந்த ஆண்டுக்காண விசாகத்திருவிழா,கடந்த 9ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.விழாவையொட்டி தினமும் இரவு 8 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்துடன் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்துக்கு முருகன் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.வைகாசி விசாகத்தையொட்டி, சனிக்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.காலை 5 மணிக்கு சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும்,பாலாபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் காலை 6 மணிக்கு கம்பத்தடி மண்டப்த்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு காலை முதல் மாலை வரை,பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது

.பின்னர் பால் காவடி,பன்னீர் காவடி,இளநீர் காவடி,புஷ்ப காவடி எடுத்தும்,அலகு குத்தியும் , பறவை காவடியும் பக்தர்கள் நேர்ச்சை செலுத்தினர்.விழாவையொட்டி,மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம்  எழுப்பினர்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பேட்டி. 
ராம்குமார் .
சென்னை பக்தர்.

Last Updated : May 18, 2019, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.