ETV Bharat / state

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி - விஜயபிரபாகரன்

மதுரை: தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி
தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி
author img

By

Published : Oct 26, 2020, 2:43 PM IST

மதுரை மாவட்டம் காளவாசல் தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழா நடைபெற்றது.

இதில் விஜயகாந்த் இளைய மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார். அவருக்கு தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஜய பிரபாகரன் கூறுகையில், “கேப்டன் உடல்நிலை சீராக உள்ளது. கரோனா பாதிப்பு தற்போது இல்லை. ஆரோக்கியமாக உள்ளார். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நன்றாக உள்ளார். அவரை குணப்படுத்திய மருத்துவர் செவிலியர்களுக்கு நன்றி. தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். செயற்குழு பொதுக்குழு கூட்டி பணிகளை தீவிரப்படுத்துவோம். தேமுதிக ஆரம்ப காலத்தில் தனித்தே களம் இறங்கியுள்ளோம். கேப்டனும், பிரேமலதாவும் கட்சித்தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவார்கள்.

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி

தேமுதிக தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை. தனித்து நின்று தேர்தலை சந்தித்து உள்ளோம். வியூகங்கள் மாறும். கட்சிக்கு எது பலமோ அதன்படி செயல்படுவோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. கண்டிப்பாக அரசியல் களம் மாறும். திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டுமே அதை நிருபித்து காட்டியுள்ளோம்.

தேமுதிக தவிர்த்து மூன்றாவது அணி என எந்தக்கட்சியும் சொல்ல முடியாது. தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும். அந்த நம்பிக்கை உள்ளது. மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் பெரியவர் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா தொகுதிகளிலும் கேப்டன் பரப்புரை செய்வார். மக்களை பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இச்சமயத்தில் தனித்த தனித்துவமான தலைவர் இல்லை. அதனால் இது முதல் தேர்தல் போல, அரசுப்பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருத்துச்சொல்ல முடியாது. தலைமை சொல்லுவார்கள். விஜயகாந்த் மகனாக நான் கருத்து சொன்னால் கட்சிக்குள் குழப்பமாகி விடும். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும். களத்தில் சந்திப்போம்" என்றார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? : பிரேமலதா விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.