ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை முன்னிட்டு முருகன் தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
இவ்விழா நாள்களில் முருகன் தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இவ்விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தெப்ப முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி பிப்ரவரி 3ஆம் தேதியும் தை தெப்பத்திருவிழா பிப்ரவரி 4ஆம் தேதியும் நடைபெறுகிறது. தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு அன்று முருகன் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 11 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளுவார். இதனைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் மின்னொளியில் தெப்பம் சுற்றுதல் நடைபெறும்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரம்!