சென்னை தேனாம்பேட்டை அருகிலுள்ள கார் ஷோரூமில், மார்ச் 3ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டை வீசினர். இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த வெடிச்சத்தம் மற்றும் கரும்புகை கிளம்பியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த கமருதீன், ராஜசேகரன், பிரசாத், ஜான்சன் ஆகியோர் இன்று மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துராமன் முன்பு சரணடைந்தனர். அவர்கள் நால்வரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.