மதுரை காவந்தன்பட்டியைச் சேர்ந்தவர் எம். ராம்பிரகாஷ், இவர் மதுரை உசிலம்பட்டி செல்லும் மதுரை சாலையில் சூப்பர் மார்க்கெட் நடத்திவருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் இவர் காலையில் கடையை திறந்தபோது 65,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு கணினிகள், ஒரு தொலைக்காட்சி மற்றும் 5,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போனதும் திருடிய நபர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து சென்றதும் தெரியவந்தது.

அந்தக் கடிதத்தில், "மன்னிப்பு. எனக்கு பசி. நீங்கள் ஒரு நாள் வருவாயை மட்டுமே இழந்தீர்கள். ஆனால் இது எனது மூன்று மாத வருவாய்க்கு சமம். மீண்டும் எனது மன்னிப்பு" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடை உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் உசிலம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகள், கை ரேகை ஆகியோரை கொண்டு திருடனை தேடி வருகின்றனர்.