மதுரை மாவட்டம் நாராயணபுரம் பகுதியில் பாலதண்டாயுதபாணி என்பவருக்குச் சொந்தமாக ஸ்ரீ நெல்லையப்பர் கேட்டரிங் சர்வீஸ் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் உணவகத்தின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே இருந்த ரூ.1,35,000 ஆயிரம் பணம், எல்இடி டிவி, சிசிடிவி, மானிட்டர் உள்ளிட்ட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடை உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடைகளை சேகரித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.