மதுரை: கரோனா நோய்தொற்றுப் பரவல் காலத்தில் மக்களின் நலனுக்காகத் தன்னலம் கருதாமல் பணிபுரிந்த முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதார தூய்மைப் பணியாளர்கள், விவசாயிகள், ஊடகத்தினர் உள்ளிட்டோருக்கு மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கீர்த்திகா என்ற இளம்பெண் தான் வரைந்த பிரமாண்டமான ஓவியத்தின் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் கோலப்பொடியைப் பயன்படுத்தி வரையப்பட்ட இந்த ஓவியம் பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த மூன்று நாள்களாகப் பல்வேறு வண்ண கோலப்பொடிகளைப் பயன்படுத்தி மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் தொடங்கி விவசாயிகள், உணவு விநியோக நிறுவனங்கள், ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் படங்களுடன் நன்றி என்ற எழுத்துகள் போன்று பிரமாண்ட ஓவியம் வரைந்துள்ளார்.
இளம்பெண் கீர்த்திகா ஏற்கனவே காபி பொடி ஓவியம் மூலமாக சமூகநலன் சார்ந்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றவர். தற்போது முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து வரைந்துள்ள இந்த ஓவியத்திற்குப் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
கரோனா காலகட்டத்தில் மக்களின் நலன்காக்க அரும்பாடுபட்டவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யும் வகையில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளதாக இளம்பெண் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் அத்துமீறல் குறித்த மாணவியின் ஓவியம் - சமூக வலைத்தளங்களில் வைரல்