ETV Bharat / state

மதுரைக்குள் நடக்கும் சுவரொட்டி களேபரம்: அதிமுக உட்கட்சி அரசியல் - மதுரைக்குள் நடக்கும் சுவரொட்டி கலவரம்: அதிமுக உட்கட்சி அரசியல்

மதுரை: தமிழ்நாட்டு அமைச்சர்களான செல்லூர் ராஜு மற்றும் உதயகுமார் ஆகியோரின் ஆதரவாளர்கள் சுவரொட்டி மூலம் களேபரம் செய்து வரும் நிகழ்வு மதுரையை கலங்கடித்துள்ளது.

madurai
madurai
author img

By

Published : Jun 1, 2020, 8:02 PM IST

தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்தத் துறைகளான வருவாய் மற்றும் பேரிடர், தகவல் தொழில் நுட்பம் மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய இரண்டிற்கும் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி வகித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே மதுரை மண்ணின் மைந்தர்கள் ஆவர். தற்போது, இருவருக்குமிடையே உரசல் இருந்து வருவதாக அதிமுகவினர் அரசல் புரசலாக பேசிவருகின்றனர். இந்நிலையில், கரோனா நிவாரண நிதி வழங்குவதில் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் செல்லூர் ராஜுவின் சேவையைப் பாராட்டி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி, ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர்களை உசுப்பேற்றியுள்ளனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் ஆதரவாளர்களும், தங்கள் பங்கிற்கு செல்லூர் ராஜூவுக்குப் போட்டியாக சுவரொட்டி அடித்து, மதுரை மாநகர் முழுவதும் ஒட்டி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக மூத்த அரசியல்வாதி ஒருவர் கூறுகையில், 'இருவரின் தனிப்பட்ட பிரச்னையைக் கட்சிக்குள் கொண்டு வந்து குழப்பம் ஏற்படுத்தும் விதமாக, தொடர்ந்து வளர்த்து வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இதுபோன்று போஸ்டர் யுத்தம் நடத்தினால் என்ன நடந்திருக்கும் என்பது அவர்களுக்கே தெரியும். மூத்த நிர்வாகிகள் பலமுறை சுட்டிக்காட்டியும் கூட, தங்களை திருத்திக் கொள்வதாக இருவரும் இல்லை.

உடனடியாக, தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு இந்த உட்கட்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அனைத்து கட்சியும் எனக்கு வேண்டும் - பிரதமர் பாராட்டிய மோகன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.